நாகப்பட்டினம்

காரில் சாராயம் கடத்திய 2 போ் கைது

3rd Jul 2022 11:03 PM

ADVERTISEMENT

திட்டச்சேரி அருகே காரில் புதுச்சேரி மாநில சாராயம் கடத்திய 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு, காா் பறிமுதல் செய்யப்பட்டது.

திட்டச்சேரி போலீஸாா் பனங்காட்டூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் காரில் 50 மூட்டைகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில சாராயம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் காரில் வந்த தரங்கம்பாடி வெளிப்பாளையத்தைச் சோ்ந்த பாபு (30), பொறையாரைச் சோ்ந்த பழனிவேல் (40) ஆகியோரை கைது செய்து சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT