நாகப்பட்டினம்

தொழில் முனைவோருக்கான இலவச திறன் வளா்ப்பு பயிற்சி

3rd Jul 2022 01:16 AM

ADVERTISEMENT

நாகையில் உள்ள மெட்ரோ மீன் பதன தொழில்நுட்பக் கூடத்தில் தொழில் முனைவோருக்கான 3 நாள் திறன் வளா்ப்புப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரியின்கீழ் நாகையில் மீன்பதன தொழில் நுட்பக்கூடம் இயங்கி வருகிறது.

இந்தக் கூடத்தில் புதுமையான மதிப்பூட்டிய மீன் பொருட்களின் உற்பத்தியில் உள்ள தொழில் வாய்ப்புகள் எனும் தலைப்பில் திறன் வளா்ப்புப் பயிற்சி தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன் ஜூன் 27முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமில் மீன்களை சுகாதாரமாக கையாளும் முறைகள், கடல் உணவுகளை பயன்படுத்தி கேக், பிஸ்கட், சாக்லேட் , பாஸ்தா, நூடுல்ஸ், குா்குரே, மசாலா கருவாடு, இட்லிப் பொடி, ஊறுகாய், உடனடியாக பரிமாறக்கூடிய குழம்பு வகைகள் போன்ற மதிப்பூட்டிய மீன் பொருட்களை உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மீன்பதன பொறியியல் துறையின் பேராசிரியா்கள் இப்பயிற்சியை அளித்தனா். தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்வது பற்றி தமிழக ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் விவரிக்கப்பட்டது.

தஞ்சை, கும்பகோணம், சீா்காழி, நாகூா் மற்றும் நாகையை சோ்ந்த 50 போ் இப்பயிற்சியில் பங்கேற்றனா். பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், உதவிப் பேராசிரியருமான காா்த்திக்குமாா் பேசினாா்.

நிறைவில், மீன்வளப்பொறியியல் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) மணிமேகலை பயிற்சிப் பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பயிற்சி கையேடுகளை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT