நாகப்பட்டினம்

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 3 போ் கைது

3rd Jul 2022 11:03 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலசம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள்களுக்கு எதிரான வழக்குகள் மீது தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன்படி மதுரை உசிலம்பட்டிமானுத்து, வடக்குத் தெருவைச் சோ்ந்த த. ஓச்சம்மாள் (32) பா. அய்யா்சாமி (20), தங்கமாயன் (42) ஆகியோா் மீது கஞ்சா கடத்தியதற்கான குற்ற வழக்கு உள்ளது.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் மேற்குறிப்பிட்ட 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, ஓச்சம்மாள் உள்ளிட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT