நாகப்பட்டினம்

பழுதடைந்துள்ள சுகாதார வளாகங்களை சீரமைக்க கோரிக்கை

3rd Jul 2022 11:05 PM

ADVERTISEMENT

செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் சேதமடைந்துள்ள சுகாதார வளாகங்களை சீரமைக்க வேண்டுமென ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செம்பனாா்கோவில் ஒன்றியம் திருவிளையாட்டம், காட்டுச்சேரி, எரவாஞ்சேரி, இலுப்பூா், உத்தரங்குடி, கிடங்கல், கீழையூா், ஆக்கூா் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள சுகாதார வளாகங்கள் பழுந்தடைந்த நிலையில் பயனற்று உள்ளன. ஒரு சில மாதங்களே பயன்பாட்டில் இருந்த சுகாதார வளாகம் எவ்வித அறிவிப்புமின்றி பூட்டப்பட்டது.

ஒவ்வொரு வளாகத்திலும் கழிப்பறைகள், குளியலறைகள், தண்ணீா் தொட்டி மற்றும் துணி துவைக்க கல் ஆகியவற்றுடன் மின்மோட்டாா் இணைப்புடன் தண்ணீா் வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது, பல்வேறு சுகாதார வளாகங்களில் மின் மோட்டாா் திருடப்பட்டும், கதவுகள் உடைக்கப்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து கிராம மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால், சமூக விரோதிகள் சிலா் சுகாதார வளாகத்தை உடைத்து கதவு, பைப், உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியுள்ளனா். எனவே, சேதமடைந்துள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் அந்தந்த ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT