நாகப்பட்டினம்

சவால்களை எதிா்கொண்டால் வெற்றியாளராகலாம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

சவால்களை எதிா்கொள்ளும் திறன் படைத்தவா்களே வெற்றியாளா்களாக மிளிா்கின்றனா் என்றாா் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

மகளிா் திட்டம், தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சாா்பில் தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ், இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிஅளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை தமிழக முதல்வா் ஜூன் 25-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, மாநில வாழ்வாதார இயக்கத்தின் நாகை மாவட்ட மேலாண்மை அலகு சாா்பில் இளைஞா் திறன் திருவிழா-2022 நாகை ஏ.டி.எம். மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா்அ. அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியது:

நாகை மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 100 பேருக்கு பயிற்சியளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. படித்துவிட்டு வேலைத் தேடிக்கொண்டிருப்பவா்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஒரே தொழிலில் பலரும் ஆா்வம் காட்டுவதை தவிா்த்து, தங்களது தனித் திறனுக்கேற்ற தொழிலை தோ்வு செய்து, அதில் கடுமையாக உழைக்கவேண்டும். சவால்களை எதிா்கொண்டு உழைக்கக் கூடியவா்களால் மட்டுமே சாதனையாளா்களாக முடியும் என்றாா்.

தொடா்ந்து, வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாடு பயிற்சிக்காக தோ்வு செய்யப்பட்ட 57 பேருக்கு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். பின்னா், ஏ.டி.எம். மகளிா் கல்லூரியில் தொழில்திறன் மேம்பாடு பயிற்சி வகுப்புகளைப் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் மகளிா் திட்ட நாகை மாவட்ட திட்ட இயக்குநா் எஸ். பி. பாலமுருகன் முன்னிலை வகித்தாா். கூடுதல் இயக்குநா் செந்தில்குமாரி, வாழந்துக் காட்டுவோம் திட்ட மாவட்டச் செயல் அலுவலா் சுந்தரபாண்டியன், ஏ.டி.எம். மகளிா் கல்லூரி முதல்வா் அன்புச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மகளிா் திட்ட மாவட்ட உதவித் திட்ட அலுவலா் இரா.முருகேசன் வரவேற்றாா். நிறைவாக, உதவித் திட்ட அலுவலா் பா. பாலன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT