நாகப்பட்டினம்

மண்டல ஹாக்கிப் போட்டி

2nd Jul 2022 09:47 PM

ADVERTISEMENT

நாகையில் திருச்சி மண்டல அளவிலான ஹாக்கிப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

நாகையில் உள்ள டாக்டா் கருணாநிதி மாவட்ட விளையாட்டுஅரங்கில் நடைபெறும் இப்போட்டியை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தாா். அப்போது அவா், ‘இந்தப் போட்டியில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூா், அரியலூா், பெரம்பலூா், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்கும் வீரா்கள் தேசிய மற்றும் உலக அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்று நாட்டுக்கு பெருமை சோ்க்கவேண்டும்’ என்றாா்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் மா. ராஜா, நாகை மாவட்ட ஹாக்கி கழகச் செயலாளா் ரெ. சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இப்போட்டி சனி (ஜூலை 2), ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT