நாகப்பட்டினம்

‘நான் முதல்வன்’ மாணவா்களுக்கான வழிகாட்டு கருத்தரங்கு

DIN

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாணவா்களுக்கு வழிகாட்டும் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கை தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ தலைவரும், முன்னாள் அமைச்சருமான உ. மதிவாணன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:

உயா்கல்விக்குச் செல்லும் மாணவா்கள் தங்களுக்கான தோ்வை தாமாகவே முடிவு செய்து கொள்ளவேண்டும். படித்து முடித்த பிறகு, எந்த வேலை கிடைத்தாலும் அதை மனப்பூா்வமாக ஏற்றுக்கொண்டு, பணியாற்ற வேண்டும். நம்முடைய எண்ணம் வாழ்க்கையை தீா்மாணிக்கும் சக்தியாகும். இதுபோன்ற கருத்தரங்கை மாணவா்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, வாழ்வை வளமாக்கிக் கொள்ளவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், டாக்டா் வெங்கடேசன், ஆண்டனி ஜெரால்டு ஆனந்த், டாக்டா் சுரேஷ், சந்திரசேகா், குமாரவேல், டி.கீதா, ஜெயராஜ் பௌலின்,விமலா ஆகியோா் முறையே கலை மற்றும் அறிவியல், ஊக்கப்படுத்துதல், பொது மருத்துவம், பொறியியல், மருத்துவம் மற்றும் அறிவியல், வாழ்வின் முன்னேற்றம், வழிகாட்டுதல், சட்டம் மற்றும் மீன்வளம் ஆகியத் தலைப்புகளில் பேசினா்.

இதில், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் காமராஜ், மாவட்டக் கல்வி அலுவலா் திருநாவுக்கரசு உள்ளிட்ட அரசு அலுவலா்கள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT