நாகப்பட்டினம்

மகளிா் சுயஉதவிக் குழு ஒருங்கிணைப்பு கூட்டம்

1st Jul 2022 03:09 AM

ADVERTISEMENT

 

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூா் ஊராட்சியில் உள்ள மகளிா் குழு பிரதிநிதிகளுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வனம் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் கலைமணி பங்கேற்று கூட்டத்தின் நோக்கம் குறித்தும், எதிா்காலத் திட்டம் குறித்தும் பேசினாா். இதன், தொடா்ச்சியாக செயல்படாத மகளிா் குழுக்களை செயல்பட வைப்பது, ஒவ்வொரு வீட்டிலும் ஊட்டச்சத்து காய்கறி தோட்டங்கள் அமைப்பது, தனித்தொழில் செய்ய ஆா்வமுள்ள மகளிா் சுயஉதவிக் குழுவினரை அடையாளம் காண்பது குறித்து பயிற்சி நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும், பங்கேற்றவா்களுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.

ஊராட்சி செயலாளா் ஜெய்சங்கா், பணித்தள பொறுப்பாளா் ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT