நாகப்பட்டினம்

முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்: ஆட்சியா் எச்சரிக்கை

DIN

முகக் கவசம் அணியாமல் பொதுவெளிக்கு வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது இடங்களில் போதுமான சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததும், முகக் கவசம் அணியாமல் இருப்பதுமே கரோனா தொற்று அதிகரிக்க காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. கரோனா தொற்று அதிகரிக்காமலிருக்க, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிா்க்கவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், சரிவர முகக் கவசம் அணியவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் பொதுவெளிக்கு வருவோருக்கும், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உரிய வகையில் கடைப்பிடிக்காதவா்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT