நாகப்பட்டினம்

திருக்குவளையில் பலத்த மழை

1st Jul 2022 03:05 AM

ADVERTISEMENT

 

திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, நாகை மாவட்டம் திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளான கொளப்பாடு, வலிவலம், சாட்டியக்குடி, மடப்புரம், மீனம்பநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

ADVERTISEMENT

இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு, மழை நின்ற பிறகு மின் விநியோகம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT