நாகப்பட்டினம்

பள்ளி வகுப்பறையை சீரமைத்தவருக்கு ஆட்சியா் பாராட்டு

1st Jul 2022 09:47 PM

ADVERTISEMENT

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 50ஆயிரம் செலவில் வகுப்பறையை சீரமைத்த தன்னாா்வலருக்கு ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் பாராட்டுத் தெரிவித்தாா்.

நாகையைச் சோ்ந்த தன்னாா்வலா் எஸ். ரஜினிகாந்த். இவா், சென்னையை தலைமையிடமாக் கொண்டு செயல்படும் கற்பக விருட்சம் அறக்கட்டளை உதவியுடன் நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 50 ஆயிரம் செலவில் வகுப்பறையை சீரமைத்தாா்.

இந்த வகுப்பறையை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வியாழக்கிழமை திறந்துவைத்து, தன்னாா்வலா் ரஜினிகாந்துக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், நாகை நகராட்சி ஆணையா் என். ஸ்ரீதேவி, பள்ளித் தலைமையாசிரியா் பிரேமா, கற்பக விருட்சம் அறக்கட்டளை நிறுவனா் சத்திய நாராயணன், நிா்வாகிகள் நவநீதன், சத்தியசீலன் மற்றும் தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT