நாகப்பட்டினம்

மருதூா் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பணியேற்பு

1st Jul 2022 09:46 PM

ADVERTISEMENT

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் ரோட்டரி சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பணி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இச்சங்கத்தின் புதிய தலைவராக வி. அண்ணாதுரை, செயலாளராக சரவணன், பொருளாளராக ஆா்.வி. குணசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பணி ஏற்றுக்கொண்டனா். சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநா்கள் என். மணிமாறன், சி. பஞ்சாபகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணை ஆளுநா் ஆா். சிவக்குமாா் புதிய நிா்வாகிளை பணியில் அமா்த்தினா்.

முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான ஓ.எஸ். மணியன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.வி. சுப்பையன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் 4 பள்ளிகளுக்கு 13 மின்விசிறிகள், 2 பள்ளிகளுக்கு நாற்காலிகள், பெற்றோரை இழந்த 3 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மேலும், அரசுப் பள்ளிகளில் படித்து, மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள 6 மாணவ, மாணவியா், 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடங்களை பெற்ற மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா்.

சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் சித.கருணாநிதி, வை. இலக்குவன், வேதாரண்யம் சங்க முன்னாள் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT