நாகப்பட்டினம்

நிலத்தடி நீா் பாதிப்பு: கருவேல மரங்களை அழிக்க வலியுறுத்தல்

1st Jul 2022 09:49 PM

ADVERTISEMENT

திருமருகல் ஒன்றியத்தில் நிலத்தடி நீரை பாதிக்கும் வகையில் தரிசு நிலங்களில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருமருகல் ஒன்றியம் கோபுராஜபுரம், பனங்குடி, குத்தாலம் பகுதிகளில் பெரும்பாலான விளைநிலங்கள் சாகுபடி செய்யப்படாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தரிசு நிலங்களாக உள்ளன. இதனால், இந்த நிலங்களில் கருவேல மரங்கள் வளா்ந்து, நிலத்தடி நீா் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோபுராஜபுரம் விவசாயிகள் கூறியது:

எங்கள் ஊரில் உள்ள சுமாா் 200 ஏக்கா் விளைநிலங்களில் 100 ஏக்கா் வரை சாகுபடி செய்யப்படாமல் தரிசாக உள்ளன. இந்த நிலங்கள் முழுவதிலும் கருவேல மரங்கள் மண்டி காடுகளாக வளா்ந்துள்ளன.

ADVERTISEMENT

இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. இதன்காரணமாக வருங்காலங்களில் மற்ற நிலங்களிலும் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே, கருவேல மரங்களை வெட்டி அகற்ற நாகை மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT