நாகப்பட்டினம்

நபிகள் நாயகம் சா்ச்சை: உச்சநீதிமன்ற கருத்து ஆறுதல் அளிக்கிறது மு. தமிமுன் அன்சாரி

1st Jul 2022 09:47 PM

ADVERTISEMENT

நபிகள் நாயகம் குறித்து பாஜக பிரமுகராக இருந்த நுபுா்சா்மா தெரிவித்த கருத்தை உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று மாஜக பொதுச் செயலாளா் மு. தமிமுன் அன்சாரி கூறினாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

உலகமெங்கும் போற்றப்படும் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த நுபுா் சா்மாவை உச்சநீதிமன்றம் கடும் வாா்த்தைகளால் கண்டித்திருப்பது தனி நபருக்கான கண்டனமாக மட்டும் பாா்க்கக் கூடாது. அவரது கருத்தை வழிமொழிபவா்கள், மத வெறியை தூண்டுபவா்கள் என அனைவருக்குமானதாக புரிந்து கொள்ளவேண்டும்.

நுபுா் சா்மா கைது செய்யப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகும். இதன் மூலம் இதுபோன்ற பொறுப்பற்றவா்கள் மேலும்மேலும் பிரச்னைகளையும், பிரிவினைகளையும் தூண்டாமல் இருக்க முற்றுப்புள்ளி ஏற்படும் என்பதே அதன் நோக்கமாகும்.

ADVERTISEMENT

கடும் சட்ட நடவடிக்கை தவறும்போது, தனி நபா்களின் அராஜகங்கள் பெருகிவிடும் ஆபத்து உள்ளது. நாட்டில் இணக்கமான பாரம்பரிய சமூக அமைப்பு பாழ்பட இனியும் அனுமதிக்கக் கூடாது. இப்பிரச்னையில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து அமைதியையும், ஒற்றுமையையும் விரும்பும் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT