நாகப்பட்டினம்

ஓய்வூதியா்களுக்கான ‘ஜீவன் பிராமன்’ திட்டம் தொடக்கம்

1st Jul 2022 09:48 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவா்களுக்கான ஜீவன் பிராமன் வாழ்வுச் சான்றிதழ் பெறும் திட்டத்தை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ், மாவட்ட கருவூலத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழக அரசின் உத்தரவுபடி மாவட்டக் கருவூலம், சாா்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்களுக்கு வருடாந்திர நோ்காணல் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இடைப்பட்ட நாள்களில் நடைபெறவுள்ளது.

இதன்படி, மாவட்ட கருவூல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் பங்கேற்று ஜீவன் பிராமன் வாழ்வுச்சான்று பெறும் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, மாவட்டக் கருவூல அலுவலா் சந்தான கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT