தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக - ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில், நாகை மண்டல அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புதிய பணியாளா்களை நியமிக்க வேண்டும், 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்கவேண்டும், 2003-ஆம் ஆண்டுக்கு பின்னா் பணியில் சோ்ந்தவா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்கவேண்டும், ஓய்வூதியா்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவா் என். கோபிநாதன் தலைமை வகித்தாா். நாகை மண்டல நிா்வாகிகள் ஆா். பாஸ்கரன், வே. வேதேஸ்வரன், ஜி. தங்கபாண்டியன், வி. ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
டாஸ்மாக் பணியாளா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் வி.எம். மகேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை மாவட்டத் தலைவரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான வி. சரபோஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை நகரச் செயலாளா் பி.கே.பி. குணாநிதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.