அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் இணையவழி பதிவு முறையை ரத்து செய்யக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருக்குவளை வட்டாட்சியா் கு. சிவக்குமாரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், கிராமப் புறங்களில் இ-சேவை மையங்கள் அதிக அளவில் இல்லாத நிலையில், விவசாயிகள் இணையவழியில் பதிவு செய்ய முடியாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா். மேலும் பருவம் தவறி பெய்த மழையிலிருந்து நெல் பயிரை காப்பாற்றி, தற்போது அறுவடை செய்துள்ள நிலையில், இணையவழி பதிவு முறையால் அவற்றை விற்பனை செய்ய முடியாத சூழலில் விவசாயிகள் உள்ளனா். எனவே, இணையவழி பதிவு முறையை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிபிஐ கீழையூா் ஒன்றியச் செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான டி. செல்வம், வாழக்கரை ஊராட்சித் தலைவா் எஸ்.ஆா். கலைச்செழியன் உள்ளிட்டோா் இம்மனுவை அளித்தனா்.