நாகை மாவட்டம், திருமருகல் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் இணையவழி நெல் கொள்முதலை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் திருமருகல் ஒன்றியச் செயலாளா் தங்கையன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் மாசிலாமணி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பாபுஜி கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா்.
இதேபோல, திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் எதிரே திருமருகல்-கங்களாஞ்சேரி சாலையில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சந்திரசேகரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்கண்ணபுரம் காவல் உதவி ஆய்வாளா் இங்கா்சால், கிராம நிா்வாக அலுவலா்கள் வீரகுமாா் (மேலப்பூதனூா்), ராஜேஸ்குமாா் (கீழத்தஞ்சாவூா்) ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.இதனால், திருமருகல்-கங்களாஞ்சேரி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.