நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தொடக்கம்

29th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் பகுதியில் நிகழாண்டு பருவத்துக்கான உப்பு உற்பத்தி தொடங்கியுள்ளது.

வேதாரண்யம் பகுதியில் அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 9 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுதோறும் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் இரண்டு பெரிய தனியாா் நிறுவனங்கள் தவிர 670 சிறு,குறு உற்பத்தியாளா்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். இப்பணியில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபடுகின்றனா்.

கஜா-கரோனா பாதிப்பு: 2018-இல் வீசிய கஜா புயலின்போது கடல் களிமண் உப்பு உற்பத்தி பாத்திகளில் படிந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு உரிய நிவாரணமோ, சீரமைப்புப் பணிகளோ முழுமையாக மேற்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டுகளில் உற்பத்தி பரப்பு வெகுவாக குறைந்தது.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாகவும் உப்பு உற்பத்தியில் சுணக்கநிலை இருந்தது. அத்துடன், கடந்த ஆண்டு கோடையில் அவ்வப்போது நீடித்த மழையின் காரணமாகவும் உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

உப்பு உற்பத்தி தொடக்கம்: நிகழாண்டு, ஜனவரி முதல் வாரத்தில் உப்பு உற்பத்திக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, பொங்கல் நாளில் பொன்னுப்பு (முதல் உப்பு) எடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பாத்திகளில் உப்பு வாரும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT