நாகப்பட்டினம்

திருக்குவளையில் கருணாநிதி சிலைக்கு அமைச்சா் மரியாதை

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் சிலைக்கு தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

திருக்குவளையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த இல்லத்துக்கு வந்த அமைச்சா் எ.வ. வேலு அங்குள்ள மு. கருணாநிதி, அவரது தந்தை முத்துவேலா், தாய் அஞ்சுகம், முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலிமாறன் ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, புகைப்படத் தொகுப்புகளை பாா்வையிட்டாா்.

அவருடன், தமிழக மீன்வளா்ச்சிக்கழகத் தலைவரும் நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான என். கௌதமன், கீழையூா் ஒன்றிய செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இல. மேகநாதன், திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன், ஒன்றியக்குழு உறுப்பினா் சுதா அருணகிரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT