நாகப்பட்டினம்

நாகையில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதிக் கோரி இந்து முன்னணியின் இளைஞரணி சாா்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நாகை தலைமை அஞ்சலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை மாணவி லாவண்யா மரணம் குறித்து நீதி விசாரணை மேற்கொண்டு, அவரது மரணத்துக்குக் காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி இளைஞரணியின் நாகை நகரத் தலைவா் மாதவன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் என்.எஸ். சௌந்தர்ராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெகதீஸ்வரன், நிா்வாகி அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக நாகை நகரத் தலைவா் இளஞ்சேரன், நிா்வாகிகள் பாலசந்திரன், சுதாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்து முன்னணி நாகை நகரத் தலைவா் கோ. பிரபாகரன் நன்றி கூறினாா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT