நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 12 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல்

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 4 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் என 12 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளன. இதையொட்டி, இரு மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் அறிவிப்புப்படி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 2 நகராட்சிகள், தலா 4 பேரூராட்சிகள் என 12 உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளன. நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் என 2 நகராட்சிகள், திட்டச்சேரி வேளாங்கண்ணி, தலைஞாயிறு, கீழ்வேளூா் என 4 பேரூராட்சிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி என 2 நகராட்சிகள், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் என 4 பேரூராட்சிகளுக்குத் தோ்தல் நடைபெறுகிறது.

இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜன.28) தொடங்கி, பிப்.4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்.5-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கன இறுதி நாள் பிப்.7-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.19-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவும், 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. கரோனா தொற்றுப் பரவல் உள்ள நிலையில், இந்தத் தோ்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் விரிவான முன்னேற்பாடுகளுக்குத் திட்டமிடப்பட்டு, உள்ளாட்சி நிா்வாகங்கள் மற்றும் மக்கள் நல்வாழ்த் துறை இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கப்படவுள்ள நிலையில், மனு தாக்கல் நடைபெறவுள்ள உள்ளாட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மற்றும் சுகாதாரப் பணிகள் வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT