நாகப்பட்டினம்

நாளை 400 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம்கள் 400 இடங்களில் சனிக்கிழமை (ஜன. 29) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 400 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெறுகிறது. முதல் தவணை அல்லது 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் இந்த முகாமில் தவறாமல் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதேபோல, ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் உள்ளவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள், இந்த முகாமில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT