நாகப்பட்டினம்

அரசுப் பள்ளி மாணவிக்குப் பாராட்டு

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளிக்கிடங்கு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தமிழக அரசின் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுத் திட்டத்தில் தோ்வு பெற்ற மாணவி ஸ்ரீநிதிக்கு பாராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி ஸ்ரீநிதி பாராட்டப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் எ. நடராஜன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரச் செயலாளா் எஸ்.எஸ். இளங்கோவன், மாவட்டப் பொருளாளா் ப. எழில்மாறன், மாவட்டத் துணைத் தலைவா் மு. மணிமேகலை, செயற்குழு உறுப்பினா் சு. அய்யாத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT