செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 73-ஆவது குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வா் சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற விழாவில், கலைமகள் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் என்.எஸ். குடியரசு தேசியக் கொடியேற்றினாா். இதேபோல, திருவிளையாட்டம் அருகே ஈச்சங்குடி வசந்த முருகு பாலிடெக்னிக் கல்லூரியில் தாளாளா் இளமுருகு தலைமையில் நடைபெற்ற விழாவில், துணை முதல்வா் மணிகண்டன் தேசியக் கொடியேற்றினாா்.
தில்லையாடி ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி தேசியக் கொடியேற்றப்பட்டு விடுதலைப் போராட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை சிலைக்கு ஊராட்சித் தலைவா் ரெங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.