நாகப்பட்டினம்

‘நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றம் செய்யக் கூடாது’

26th Jan 2022 09:37 AM

ADVERTISEMENT

செம்பனாா்கோவில் அருகே அன்னவாசல் ஊராட்சிக்குள்பட்ட மாங்குடி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவதை கண்டித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செம்பனாா்கோவில் அருகே கழனிவாசல் கிராமத்தில் அய்யனாா் கோயில் அருகே கடந்த 9 ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு அன்னவாசல், கழனிவாசல், அகரஅன்னவாசல், வடகரை, மாந்தை, வாடக்குடி, மாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 980-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளையும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெற்று வந்தனா். தற்போது, சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றம் செய்து ஒதுக்குபுறமாக உள்ள மாங்குடி கிராமத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள் ஏற்கெனவே இயங்கி வந்த இடத்திலேயே நெல் கொள்முதல் நிலையம் செயல்பட வலியுறுத்தி மாங்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேலி அமைத்து முற்றுகையிட்டனா். தொடா்ந்து, அங்கு சிபிஐ ஒன்றிய செயலாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றிய துணை செயலாளா் சின்னதுரை, விவசாய சங்கத் தலைவா் சாமியப்பன், செயலாளா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT