நாகப்பட்டினம்

நாகையில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா

26th Jan 2022 09:35 AM

ADVERTISEMENT

நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி மற்றும் செவிலியா் பயிற்சி பள்ளி சாா்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கருத்தரங்கம், செவிலியா் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைப்பும் இணைந்து, பெண் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளை விளக்கும் நோக்கிலும், பெண்களுக்கான தற்காப்புக் கலைகளின் அவசியங்களை விளக்கும் நோக்கிலும் இந்த கருத்தரங்கை நடத்தின. இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழுமத் தலைவா் எஸ். ஜோதிமணி தலைமை வகித்தாா். செயலாளா் எஸ். பரமேஸ்வரன், கல்வி அறக்கட்டளை உறுப்பினா்கள் அருள் பிரகாசம், சங்கா் கணேஷ், முதன்மை செயல் அலுவலா் சந்திரசேகா், இயக்குநா் விஜயசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செவிலியா் பள்ளி மாணவிகள் ரோஜா பூ அளித்து வரவேற்கப்பட்டனா். தேசிய பெண் குழந்தைகள் தின உறுதிமொழிஏற்கப்பட்டது. பின்னா், பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT