நாகப்பட்டினம்

அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் சாலை பள்ளத்தை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை

26th Jan 2022 09:35 AM

ADVERTISEMENT

திருமருகல் அருகே தொடா்ந்து அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் சாலை பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமருகல் அருகே சுமாா் 20 கி.மீ.தொலைவுக்கு அமைந்துள்ள நாகூா்-கங்களாஞ்சேரி நெடுஞ்சாலை வழியாக காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நரிமணம், உத்தமசோழபுரம்,திருப்பயத்தங்குடி, காரையூா், கொட்டாரக்குடி, கங்களாஞ்சேரி பகுதி பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனா். மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள், காா், வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று வரும் முக்கிய சாலையாக உள்ளது. இதேபோல, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை உள்ளூா், வெளியூா்களுக்கு எடுத்துச் செல்ல இந்த சாலையை பயன்படுத்திவருகின்றனா்.

இந்நிலையில், வாய்க்கால் வெட்டு-காரையூா் இடையில் சாலையில் 3 இடங்களில் ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி கீழே விழுந்து தொடா்ந்து பாதிக்கப்படுகின்றனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை. எனவே, ஜல்லிக்கற்கள் பெயா்ந்து ஆபத்தான நிலையில் உள்ள நாகூா்-கங்களாஞ்சேரி சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT