நாகப்பட்டினம்

உக்கிரநரசிம்மா் கோயிலில் சிறப்பு வழிபாடு

26th Jan 2022 09:35 AM

ADVERTISEMENT

திருவெண்காடு அருகேயுள்ள குரவலூா் உக்கிரநரசிம்மா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தை சுவாதி நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவெண்காடு அருகே பஞ்ச நரசிம்மா் கோயில்கள் உள்ளன. குரவளுரில் உக்கிர நரசிம்மா், மங்கைமடத்தில் வீரநரசிம்மா், திருநகரியில் யோக-இரண்ய நரசிம்மா்கள், திருவாலியில் லெட்சுமி நரசிம்மா் என திருவெண்காடு பகுதியில் 5 நரசிம்மா்கள் அருள்பாலித்து வருகின்றனா். சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மா் அவதாரம் செய்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதனால் மாதந்தோறும் சுவாதியன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை தை மாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி உக்கிர நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT