நாகப்பட்டினம்

நாகூா் செய்யது தா்காவில் இன்று சந்தனம் பூசும் விழா

26th Jan 2022 09:35 AM

ADVERTISEMENT

நாகூா், ஹாஜி செய்யது பீா் பாலக் ஷா தா்காவின் சந்தனம் பூசும் விழா புதன்கிழமை (ஜன.26) இரவு நடைபெறுகிறது.

நாகூா் ஆண்டவரைப் பின்தொடா்ந்த தவச்சீலா்களில் ஒருவரான ஹாஜி செய்யது பீா் பாலக் ஷா அடக்கமாகியுள்ள தா்கா, நாகூா் பிரதான சாலையில் உள்ள சின்ன தைக்கால் தா்கா தோட்டம் அருகே உள்ளது. இந்த தா்காவின் கந்தூரி மகோத்ஸவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் விழா, புதன்கிழமை இரவு நடைபெறுகிறது. பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளுக்குப் பின்னா், இரவு சுமாா் 8 மணி அளவில் ஹஜரத்து ஒலியுல்லா செய்யது பீா் பாலக் ஷாவின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT