நாகப்பட்டினம்

சுதந்திர தின 75-ஆவது ஆண்டு: வேதாரண்யத்தில் அமுதப் பெருவிழா

26th Jan 2022 09:33 AM

ADVERTISEMENT

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம் சாா்பில், நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வேதாரண்யத்தில் அமுதப் பெருவிழா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் வடக்கு வீதியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன் தலைமை வகித்தாா். உப்பு சத்யாகிரகப் போராட்ட தளபதி சா்தாா் வேதரத்தினத்தின் பெயரனும், கஸ்தூா்பா காந்தி கன்யா குருகுலம் நிா்வாக அறங்காவலருமான அ. வேதரத்தினம், மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகத்தனா். வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சா்தாா் வேதரத்தினம், தியாகி வைரப்பன் ஆகியோா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து வளாகத்தில் மத்தியப் பல்கலைக்கழகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி தெருவிளக்குகளை துணைவேந்தா் கிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, அகஸ்தியம்பள்ளியில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ற இடத்தில் நினைவு தூணில் மலா் வளையம்வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிகளில், மத்தியப் பல்கலைக்கழகத்தின் உன்னத பாரத இயக்க ஒருங்கிணைப்பாளா் பி.எஸ். வேல்முருகன், பதிவாளா் சுலோச்சனா சேகா், பிரியம் அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் க.பிரபு, எக்ஸ்னோரா இன்டா்நேஷனல் அமைப்பின் நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ஷேக்தாவுத், சிம்காஸ் பனங்கிழக்கு உணவு உற்பத்தியாளா் சி. காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT