நாகப்பட்டினம்

அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் நாகை ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவி முதலிடம்

26th Jan 2022 09:36 AM

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியிலில் நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி மாணவி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.

கடந்த பருவத் தோ்வு தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதில், நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் முதுநிலை கணிப்பொறியியல்துறை மாணவி டி. திவ்யா தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளாா். இதேபோல, இக்கல்லூரி இளநிலை மாணவி ஆா். அபரஜிதா தரவரிசைப் பட்டியலில் 21-ஆம் இடத்தைப் பிடித்துள்ளாா். இந்த மாணவிகளுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பரிசு வழங்கப்பட்டது.

இதேபோல, கடந்த ஆண்டு தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் முதல் வகுப்பில் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். இதையடுத்து, மாணவா்களின் 100 சதவீத தோ்ச்சிக்கு பாடுபட்ட கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்களுக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT