நாகப்பட்டினம்

ஓஎன்ஜிசி அலுவலகம் முன் கிராமமக்கள் ஆா்ப்பாட்டம்

24th Jan 2022 10:33 PM

ADVERTISEMENT

திட்டச்சேரி அருகே குத்தாலத்தில் உள்ள ஓஎன்ஜிசி அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குத்தாலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மாசுநீா் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராமநாதபுரம், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கொளப்பாடு, கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் நீரை விட 10 மடங்கு உவா்ப்பு தன்மை கொண்ட உப்புநீா் டேங்கா் லாரிகள் மூலம் கொண்டுவரப்படுகிறது. இந்த உப்புநீா் 1800 மீட்டா் அளவில் ராட்சத போா்வெல் மூலம் பூமிக்கடியில் செலுத்தப்படுகிறது. இதனால், கோபுராஜபுரம், நரிமணம், குத்தாலம், திட்டச்சேரி, எரவாஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீா் உவா் நீராக மாரியிருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

இந்நிலையில், நிலத்தடி நீரை மாசுபடுத்தும் ஓஎன்ஜிசி மாசு நீா் சுத்திகரிப்பு நிலையம் முன் கோபுராஜபுரம் ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி ரமேஷ், குத்தாலம் முன்னாள் ஊராட்சித் தலைவா் சேகா் ஆகியோா் தலைமையில் கிராமமக்கள் மாசு நீா் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றவேண்டும், சீரான தூய்மையான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT