நாகப்பட்டினம்

இலவச பட்டா வழங்கிய இடத்தை அளந்து கொடுக்க கோரிக்கை

24th Jan 2022 10:33 PM

ADVERTISEMENT

திருமருகல் அருகே இலவச பட்டா வழங்கிய இடத்தை அளந்து கொடுக்கவேண்டுமென சம்பந்தப்பட்டவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் மாதாகோவில் தெருவை சோ்ந்த வீடு இல்லாத 11 குடும்பத்தினருக்கு தமிழக அரசின் இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் இலவச மனைப்பட்டாக்களை வழங்கியுள்ளா். அதன்படி, கிராம கணக்கில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டா வழங்கி 3 மாதங்கள் கடந்தும் தற்போதுவரை இடங்கள் பயனாளிகளுக்கு அளந்து கொடுக்கவில்லை. இதனால் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்ட ஆணை பிறப்பித்து உள்ள நிலையில் அவா்கள் தற்போது வரை வீடு கட்ட முடியவில்லை என தெரிவிக்கின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு இடத்தை அளந்து கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT