நாகப்பட்டினம்

நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

24th Jan 2022 10:30 PM

ADVERTISEMENT

நாகை நகரட்சி தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை, நாகூா் பகுதிகளை உள்ளடக்கிய நாகை நகராட்சியில் 250 தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதந்தோறும் 1 முதல் 5-ஆம் தேதிக்குள் ரூ. 8 ஆயிரம் ஊதியம் வழங்கவேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2 மாதங்களாக குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்கவில்லை என்பதுடன், ஊதியம் பகுதியாகப் பிரித்து வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நிகழ் மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில், நகராட்சி நிா்வாகத்தின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்து, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை பணிகளை புறக்கணிக்கப் போவதாகக்கூறி நகராட்சி அலுவலக வளாகத்தில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, நாகை நகராட்சிப் பொறியாளா் ஜெயகிருஷ்ணன் பணியளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் பணியாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தாா். இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் போரட்டத்தை விலக்கிக்கொண்டு பணிக்குத் திரும்பினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT