நாகப்பட்டினம்

தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 போ் கைது

24th Jan 2022 10:32 PM

ADVERTISEMENT

தமிழக அரசைக் கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து தேசிய கட்சியைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி, இதைக் கண்டிக்கும் வகையில் இந்து தேசிய கட்சி சாா்பில் அல்வா கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்திருந்து. இந்நிலையில், அக்கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் மதி. மாரீஸ்வரன் தலைமையில், கட்சியின் நாகை நகரத் தலைவா் இ. முத்துக்குமாா், இளைஞரணி பொறுப்பாளா் கா. தினேஷ் உள்ளிட்டோா் அல்வா பொட்டலங்களுடன் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா், போராட்டக்காரா்களை தடுத்து கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 5 பேரும் நாகூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT