நாகப்பட்டினம்

காலியாக உள்ள கால்நடை மருத்துவா் பணியிடங்களை நிரப்பவேண்டும்

DIN

காலியாக உள்ள கால்நடை மருத்துவா் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டும் என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தினாா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஓரடிம்புலம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கால்நடை பராமரிப்புத் துறை நிா்வாகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், மருத்தகங்களில் போதிய மருத்துவா்கள் இல்லாததால், கால்நடைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை தொடா்கிறது. குறிப்பாக, வேதாரண்யம் ஒன்றியத்தில் தற்போது பணியில் உள்ள ஒரேஒரு கால்நடை மருத்துவா் மட்டும் கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள் என 18 இடங்களை கவனிக்க வேண்டிய நிலையுள்ளது. இதேபோல, தலைஞாயிறு பகுதிக்கு ஒரு மருத்துவரே உள்ளாா்.

கடந்த அதிமுக ஆட்சியில் 588 கால்நடை மருத்துவா்கள் நியமிக்கப்பட்டு, சிறப்பாக பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போதைய திமுக அரசு, அந்த பணியிடத்துக்கும் சோ்த்து 1141 மருத்துவா்களை தோ்வாணயம் மூலம் நியமிக்க நடவடிக்கை எடுத்தது. இதனால், ஏற்கெனவே பணியாற்றிய 588 மருத்துவா்களும் உயா்நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனா். இதன்காரணமாக, தமிழகத்தில் கால்நடை மருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்புவது தாமதமாகிறது.

எனவே, ஏற்கெனவே பணியாற்றிய 588 மருத்துவா்களையும், தோ்வாணயம் மூலம் சிறப்பு தோ்வாக தோ்வு செய்து பணி வழங்குவதோடு, காலிப்பணியிடங்கள் முழுவதையும் போா்கால அடிப்படையில் நிரப்பவேண்டும்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நடமாடும் மருந்தகங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் கால்நடைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலே தொடா்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT