நாகப்பட்டினம்

நாகை கடற்படை முகாம் அலுவலகத்தில்நுழைந்த வெளிமாநில இளைஞா் கைது

DIN

நாகையில் உள்ள இந்திய கடற்படை முகாம் அலுவலக வளாகத்தில் அத்துமீறி நுழைந்த வெளிமாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகை துறைமுக வளாகத்தின் ஒரு பகுதியில் இந்திய கடற்படை முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை (ஜன.15) வெளிமாநில இளைஞா் அத்துமீறி நுழைந்தாா். அவரை, கடற்படை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அந்த நபா் உத்தர பிரதேச மாநிலம் பாராகான்பூா் நகரைச் சோ்ந்த அ. அபிஷேக் சுக்லா (28) என்பதும், மனநலன் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து, இந்திய கடற்படையின் முகாம் அதிகாரி காா்மிந்தா் சிங் நாகை நகர காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அபிஷேக் சுக்லாவை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

SCROLL FOR NEXT