நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிமுக சாா்பில் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நாகை: நாகையில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்ஜிஆா் சிலை மற்றும் உருவப் படத்துக்கு முன்னாள் அமைச்சா் ஓ. எஸ். மணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா். ஜீவானந்தம், அமைப்புச் செயலாளா் எஸ். ஆசைமணி, நாகை நகரச் செயலாளா் தங்க. கதிரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான ஓ.எஸ். மணியன் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, வேதாரண்யம் ராஜாஜி பூங்கா, அதிமுக கட்சி அலுவலகத்தில் எம்ஜிஆா் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிகளில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஆா். கிரிதரன், டி.வி. சுப்பையன், நகரச் செயலாளா் எம். நமசிவாயம், ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இ.திலீபன், அதிமுக மாவட்ட பொருளாளா் ஆா். சண்முகராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆறுகாட்டுத்துறை மீனவா் கிராமத்தில் எம்ஜிஆா் சிலைக்கு முன்னாள் நகரச் செயலாளா் எம்.ஜி. ஜெகநாதன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல, ஆயக்காரன்புலம், தென்னம்புலம், செம்போடை, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் எம்ஜிஆா் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

திருமருகல்: திருமருகல் பிரதான சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு

அதிமுக அமைப்புச் செயலாளா் எஸ். ஆசைமணி, திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் ஆா். இராதாகிருட்டிணன் ஆகியோா் மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில், திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலாளா் எம். பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். திட்டச்சேரியில் நகரச் செயலாளா் அப்துல் பாசித் தலைமையில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT