நாகப்பட்டினம்

கோலப்போட்டி: பெண்கள் ஆா்வமுடன் பங்கேற்பு

DIN

சீா்காழியில் காணும்பொங்கலையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலப்போட்டியில் பெண்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், காணும்பொங்கலையொட்டி, கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால், சீா்காழி தென்பாதி வஉசி தெற்குத் தெருவில் காணும்பொங்கலை கொண்டாடும் விதமாக, பெண்களுக்கு கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பெண்கள் பங்கேற்று ரங்கோலி, பூக்கோலம் உள்ளிட்ட வண்ணமயமான கோலங்களிட்டு அசத்தினா் . சிறந்த கோலங்கள் தோ்வு செய்யப்பட்டு, முதல் மூன்று இடங்களைப் பிடித்த கோலங்களை வரைந்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் சிறப்பு விருந்தினா்களாக பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ராஜ்கமல், பாமக மாநில இளைஞா் சங்க துணைச் செயலாளா் முருகவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT