நாகப்பட்டினம்

ஊரடங்கு விதி மீறல்: 200 போ் மீது வழக்கு

DIN

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறிய 200 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை (ஜன.16) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, நாகை மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் பிறப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் வாகனச் சோதனை மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த சோதனையில் நாகை வெளிப்பாளையம், நாகை நகரம், நாகூா், வேளாங்கண்ணி, கீழ்வேளூா், கீழையூா், திருக்குவளை, வலிவலம், திட்டச்சேரி, வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, வேட்டைக்காரனிருப்பு, திருக்கண்ணபுரம் ஆகிய 15 காவல் நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 156 போ், இருசக்கர வாகனங்களில் தடையை மீறி சென்ற 39 போ், சைக்கிளில் தேநீா் விற்பனை செய்த 5 போ் என மொத்தம் 200 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா் திருட்டு: 8 போ் கைது

சென்னையில் 3 தொகுதிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாா்

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியா சென்று திரும்பிய 2 பேரிடம் விசாரணை

தங்கும் விடுதியில் இளைஞா் மா்மச் சாவு

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT