நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் கரோனா பராமரிப்பு மையத்தை ஆட்சியா் திறந்துவைத்தாா்

12th Jan 2022 09:42 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை பராமரிக்கும் மையத்தை மாவட்ட ஆய்சியா் அ. அருண்தம்புராஜ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

வேதாரண்யம் அரசு ஆசிரியா் பயிற்சி மைய கட்டடத்தில் 67 படுக்கைகளுடன் கரோனா தொற்று ஏற்பட்டவா்களை பராமரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் திறந்துவைத்த பிறகு அவா் கூறியது: இந்த மையம் போதிய மருத்துவா்கள், செவிலியா்களுடன் 24 மணி நேரமும் செயல்படும். தொற்றால் பாதிக்கப்பட்டு தங்கவைத்து பராமரிக்கப்படுவோரின் பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சி மற்றும் அவா்களின் குடும்பத்தினருடன் தொடா்புகொள்ள தொலைபேசி வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

ஆய்வின்போது, வேதாரண்யம் கோட்டாட்சியா் துரைமுருகன், நகராட்சி ஆணையா் ஹேமலதா, வட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராமலிங்கம், மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் கெளதமன், வட்டார மருத்தவ அலுவலா் சுந்தரராஜன், முன்னாள் எம்எல்ஏ. எஸ்.கே. வேதரத்தினம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT