நாகப்பட்டினம்

பொதுமக்களுக்கு இலவச மஞ்சப் பை விநியோகம் தொடக்கம்

12th Jan 2022 09:43 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தில் பொதுமக்களுக்கு இலவச மஞ்சப் பை விநியோகம் மற்றும் விழிப்புணா்வு இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

வேதாரண்யம் பேருந்து நிலைய வளாகத்தில் நகர திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். முன்னாள் எம்எல்ஏ. எஸ்.கே. வேதரத்தினம், நகரச் செயலாளா் மா.மீ. புகழேந்தி, ஒன்றிய செயலாளா்கள் என். சதாசிவம், உதயம் முருகையன், மகா. குமாா், வழக்குரைஞா்கள் மறைமலை, அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT