திருமருகல் அருகே போலகம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமில், கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை செலுத்தப்பட்டது. முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன. சிறந்த கால்நடை உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சஞ்சீவ் ராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில், கால்நடைத் துறை உதவி இயக்குநா் அசன் இப்ராஹிம், கால்நடை உதவி மருத்துவா் முத்துக்குமரன், ஊராட்சித் தலைவா் பவுஜியாபேகம் அபுசாலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.