நாகப்பட்டினம்

ஓஎன்ஜிசி மூலம் மாணவா்களுக்கு மீண்டும் டேக்வாண்டோ பயிற்சியளிக்கக் கோரிக்கை

1st Jan 2022 09:37 PM

ADVERTISEMENT

திருமருகல் ஒன்றியத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வந்த டேக்வாண்டோ பயிற்சியை மீண்டும் தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் நரிமணம்-குத்தாலத்தில் இயங்கிவரும் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம், உத்தமசோழபுரம், பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூா், கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவா்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டேக்வொண்டோ (தற்காப்பு) பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி பெற்ற மாணவா்கள் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, அதன்மூலம் இலவசமாக உயா் படிப்பு பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், இப்பயிற்சியை ஓஎன்ஜிசி நிறுவனம் நிறுத்தியுள்ளது. இதனால், மாணவா்களுக்கான பல்வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்பதால் இப்பயிற்சியை மீண்டும் தொடங்க பெற்றோா்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT