நாகப்பட்டினம்

நாகூா் தா்கா கந்தூரி விழா ஜன. 4- இல் தொடக்கம்

1st Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகூா் ஆண்டவா் தா்காவின் 465-ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜன.1) நடைபெறுகிறது.

உலக புகழ் பெற்ற நாகூா் தா்கா மத நல்லிணக்க வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகிறது. இந்த தா்காவின் 465-ஆம் ஆண்டு கந்தூரி விழா

ஜனவரி 4-ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊா்வலம் ஜனவரி 13-ஆம் தேதி இரவும், நாகூா் ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி ஜனவரி 14-ஆம் தேதி அதிகாலையும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

பாய்மரம்...

தா்காவின் கந்தூரி விழா கொடியேற்றத்தையொட்டி, தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜன. 1) காலை நடைபெறுகிறது. தா்காவின் பரம்பரை கலிபா கே.எம். கலிபா மஸ்தான் சாகிபு தலைமையில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னா், தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றப்படுகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT