நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் நாளை கரோனா தடுப்பூசி முகாம்

1st Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் புதிதாக 15 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 350 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முதல் தவணை அல்லது 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள், இந்த முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT