நாகப்பட்டினம்

வாகனம் மோதி காயமடைந்தவா் உயிரிழப்பு

1st Jan 2022 09:41 PM

ADVERTISEMENT

கீழையூா் அருகே சரக்கு வாகனம் மோதி காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழையூா் காவல் சரகம் பிரதாபராமபுரம் பூவைத்தேடி ஈசிஆா் மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் தம்புசாமி (55). இவா், அப்பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு, சாலை வழியே ஆடுகளுடன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதி படுகாயமடைந்தாா்.

அவரை, நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம்புசாமி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT