நாகப்பட்டினம்

புத்தாண்டு கொண்டாட்டம்: அமைச்சா் பங்கேற்பு

1st Jan 2022 09:44 PM

ADVERTISEMENT

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் நடைபெற்ற ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று கேக் வெட்டினாா்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தலைஞாயிறு சீயோன் ஜெப பேராலயத்தில் சனிக்கிழமை அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், வேதாரண்யம் எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் பங்கேற்று அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தாா். மேலும், கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினாா்.

தொடா்ந்து, சிறுவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன், வாணவேடிக்கையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சபை போதகா் சந்திரமோகன், வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் தங்க.சௌரிராஜன், நகரச் செயலாளா் பிச்சயன், சமூக ஆா்வலா் மாதவன் மற்றும் வணிகா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT