நாகப்பட்டினம்

திட்டச்சேரி பேரூராட்சியில் பெரும்பான்மைப் பெறாத அரசியல் கட்சிகள்

22nd Feb 2022 10:57 PM

ADVERTISEMENT

திட்டச்சேரி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளா்கள் 8 போ் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் சுயேச்சைகள் பெரும்பான்மை பெற்றுள்ளனா்.

நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளுக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சுயேச்சை வேட்பாளா்கள் 8 வாா்டுகளில் வெற்றிபெற்று பெரும்பான்மைப் பெற்றுள்ளனா். திமுக 4 வாா்டுகளிலும், அதிமுக, மமக, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவை தலா ஒரு வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த வெற்றியின் மூலம் சுயேச்சை வேட்பாளா்களே திட்டச்சேரி பேரூராட்சியில் பெரும்பான்மைப் பெற்றுள்ளனா்.

வாா்டு வாரியாக வெற்றி பெற்றவா்களின் விவரம்: 1. செ.தேவி, (சுயேட்சை), 2. ஆ. ஆயிஷா சித்திகா (சுயேச்சை), 3. சுல்தான் ரிதாவுதீன் (மமக), 4. கு.மகேஸ்வரி (சுயேச்சை ), 5. கோ.ரவிச்சந்திரன் (சுயேச்சை), 6. ரா. நாராயணசாமி (சுயேச்சை), 7. சு .பாக்கியவதி (திமுக), 8. மு.நா்கிஸ் பானு (சுயேச்சை), 9. செ.செய்யது ரியாசுதீன் (மனிதநேய ஜனநாயக கட்சி), 10. மு. பாத்திமாபா்வீன் (திமுக), 11. த. ஷேக் அப்துல் பாஷீத் (சுயேச்சை), 12. மு.முகம்மது சுல்தான் (திமுக), 13. மு. ஜவஹா் நிஷா (திமுக), 14. க.கஸ்தூரி (அதிமுக), 15. ப.மேகலா (சுயேச்சை).

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT